பெண்களுக்கு முகச்சுருக்கத்தை போக்கி இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ் !!
உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.
காய்ச்சாத பாலை
முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும்.
ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள
இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குழித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும்.
வெந்தயம் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அற்புதங்களை தருகிறது. அது சுருக்கம், கருமை,
முகபப்ரு என பலப் பிரச்சனைகளை குணமாக்குகிறது, முகச் சுருக்கத்தையும் போக்கும்.
முகத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால் வெந்தயத்தை உபயோகப்படுத்தும்போது தேவையான ஈரப்பதம் பெற்று முகம் பளபளக்கும்.
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல் போடுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் சுத்தமாக இருக்கும்.
அதிக எண்ணெய் பசை இருப்பவர்கள், வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் அதிக எண்ணெய் முகத்தில் வழிவது தவிர்க்கப்படும்.
No comments:
Post a Comment