nannari-root-with-high-medicinal-properties- அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ள நன்னாரி வேர் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

nannari-root-with-high-medicinal-properties- அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ள நன்னாரி வேர் !!

Nannari Root

அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ள நன்னாரி வேர் !!


நன்னாரி வேர் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு மருந்து உற்பத்தியிலும், வெளிநாட்டு மருந்து உற்பத்திக்காக, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

நன்னாரி வேரைப் பொடியாக்கி, பாலில் சிறிது கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல், இள நரை பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளரும். மேலும் சிறுநீர் நன்கு பிரியும்.

நன்னாரி வேர்ப் பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டுவர, மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்கும். நன்னாரி வேர்ப் பொடியுடன் கொத்த மல்லி விதைப் பொடியை கலந்து, காய்ச்சி குடித்து வந்தால் பித்தம் தொடர்பான வியாதிகள் குணமாகும்.
 
நன்னாரி. நெருஞ்சில் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப் பை கற்கள் கரையும். நன்னாரி, தனியா, சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் பருமன் குறையும்.
 
நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும். இதயம் வலுவடையும்.
 
நன்னாரி வேரை இடித்துச் சாறு பிழிந்து, தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரண கோளாறு நீங்கும். நன்னாரி வேரை இடித்துச் சாறு எடுத்து, காலை, மாலை இருவேளையும் குடித்துவந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.
 
நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் பித்தம், உடல் சூடு குறையும். நன்னாரி, சதகுப்பை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
 
நன்னாரி வேரை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு, செரிமான பிரச்சனை, சுவாச பாதிப்புகள், வாதம் சார்ந்த வியாதிகள், சரும பாதிப்புகள் என அனைத்தும் நீங்கிவிடும்.

No comments:

Post a Comment