useful-simple-tips-for-family-heads- குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள எளிய குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

useful-simple-tips-for-family-heads- குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள எளிய குறிப்புகள் !!

Kitchen Tips

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள எளிய குறிப்புகள் !!



எள் உருண்டை செய்வதற்கு, எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக்கொண்டுவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால், எளிதாக அலசிவிடலாம்.

* சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும்போது, கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரைப்பொடி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால், நேரமும் மிச்சம். சர்க்கரையும் வீணாகாது.

* அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்குப் பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
 
* மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.
 
* பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
 
* சமோசாவை பொறிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டு, பொரிய விடவும். பிறகு சமோசாவைப் பொறித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.

No comments:

Post a Comment