some-beauty-tips-to-help-get-rid-of-oily-skin-on-the-face முகத்தில் வழியும் எண்ணெய் தன்மையை போக்க உதவும் சில அழகு குறிப்புகள்.....!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

some-beauty-tips-to-help-get-rid-of-oily-skin-on-the-face முகத்தில் வழியும் எண்ணெய் தன்மையை போக்க உதவும் சில அழகு குறிப்புகள்.....!!

Beauty Tips

முகத்தில் வழியும் எண்ணெய் தன்மையை போக்க உதவும் சில அழகு குறிப்புகள்.....!!


முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.
 
முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை 
 
தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும். முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
 
புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து கழுவி வர, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை  சுரப்பது தடுக்கப்படும். இம்முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்துக் காணப்படும்.

No comments:

Post a Comment