some-tips-to-easily-remove-dark-circles-on-the-armpits அக்குளில் ஏற்படும் கருமையை எளிதில் நீக்க சில டிப்ஸ் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 29 August 2021

some-tips-to-easily-remove-dark-circles-on-the-armpits அக்குளில் ஏற்படும் கருமையை எளிதில் நீக்க சில டிப்ஸ் !!

Baking soda

அக்குளில் ஏற்படும் கருமையை எளிதில் நீக்க சில டிப்ஸ் !!


இயற்கை முறையிலான சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள கருமை நீங்கி, மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும். முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்: 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர்.
 
செய்முறை: ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க  வேண்டும். இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் கருமை நீங்கி மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.
 
பேக்கிங் சோடா சிகிச்சை தேவையான பொருட்கள்: ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
 
செய்யும் முறை: தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் கழுவவேண்டும். பின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லாவிட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.


No comments:

Post a Comment