some-natural-medical-tips-to-get-rid-of-migraine-easily- ஒற்றை தலைவலியை எளிதில் போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

some-natural-medical-tips-to-get-rid-of-migraine-easily- ஒற்றை தலைவலியை எளிதில் போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

ஒற்றை தலைவலியை எளிதில் போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!



ஒற்றைத் தலைவலி சிலருக்கு பரம்பரையாகவே தோன்றும். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும்  பாதிப்புகளினால் அதிகமாக ஒற்றைத்தலைவலி தோன்றும்.

ஒற்றைத் தலைவலி பரம்பரையாகவும், பணி சூழல், உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது. ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.  ஒற்றைத் தலைவலியில் கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, பக்கவாத ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என வகைகள் உண்டு.
 
ஒற்றை தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். அதிக மன அழுத்தத்துடன்  காணப்படுவார்கள். லேசான தலைவலியுடன் ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும் சிலருக்கு 72 மணி நேரம் கூட தொடர்ந்து நீடிக்கும்.
 
நல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர  ஒற்றைத்தலைவலி குணமாகும்.
 
நல்லெண்ணெய் கால் லிட்டரில் கருஞ்சீரகப்பொடி 50 கிராம், நெய் 10 கிராம், எலுமிச்சை சாறு 10 மிலி, வெற்றிலைச்சாறு 10 மிலி கலந்து நன்றாக காய்ச்சி வடித்து  வைத்துக்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலைவலி குணமாகும்.

No comments:

Post a Comment