some-tips-to-help-reduce-belly-fat தொப்பை ஏற்படுவதை குறைக்க உதவும் சில குறிப்புகள்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

some-tips-to-help-reduce-belly-fat தொப்பை ஏற்படுவதை குறைக்க உதவும் சில குறிப்புகள்...!!

weight loss

தொப்பை ஏற்படுவதை குறைக்க உதவும் சில குறிப்புகள்...!!


தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும்.

கொழுப்பு வகை உணவுகள், அதாவது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் வறுத்த உணவுகள், சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, இனிப்புகள் என பல  பண்டங்களை தின்று தொப்பையை வளர்க்கிறோம்.
 
ஆரோக்கியமற்ற உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடையாது. இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து உண்டால், குண்டாவது நிச்சயம். துரித  உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், துரிதமாக தொப்பையும் வளர்ந்துவிடும். இது உடலின் நடுப்பகுதியான இடுப்பின் அளவை பெரிதாக்குகிறது.
 
தொப்பை இல்லாத இயல்பான உடலையாவது பெற வேண்டுமானால், பாஸ்ட் புட் உணவுகளை துரிதமாக ஒதுக்கிவிடவும். உடற்பயிற்சி என்றால் உடலின்  உறுப்புகள் அனைத்திற்கும் புத்துணர்சிக் கொடுக்கும், உடலின் இயக்கத்தை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை செய்யவேண்டும். யோகா, ஜாகிங் போன்ற பயிற்சிகளை  செய்வதால், உடலும் வலுப்படும், ஆரோக்கியமும் உறுதியாகும்.
 
தொப்பையில்லா, தட்டையான வயிற்றை பெறலாம். உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள தசைகள் வலுப்பெறும், கொழுப்புகள் எரிபொருளாக செயல்பட்டு கரைந்துவிடும். உடற்பயிற்சி செய்யும்போது, தசைகளிலுள்ள கொழுப்புகள் மட்டுமே குறையும் என்பதால் கட்டுக்கோப்பான உடல்வாகைப் பெறலாம். கட்டுக்  கோப்பான உடல் வேண்டுமானால், உடற்பயிற்சியும் வாய் கட்டுப்பாடும் அவசியம்.
 
உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர்,  பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

No comments:

Post a Comment