auric-leaf-has-many-medicinal-uses மருத்துவ பயன்கள் மிகுந்து காணப்படும் அவுரி இலை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 3 September 2021

auric-leaf-has-many-medicinal-uses மருத்துவ பயன்கள் மிகுந்து காணப்படும் அவுரி இலை !!


மருத்துவ பயன்கள் மிகுந்து காணப்படும் அவுரி இலை !!


அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.

தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
 
நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. 
 
காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7  நாட்கள் வரை செய்து வர வேண்டும்.
 
மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும். 
 
பாம்புக்கடிக்கு முதலுதவி சிகிச்சை: அவுரிஇலையைப் பசுமையாக அரைத்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிடக் கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
 
வெள்ளைப்படுதல் குணமாக அவுரி வேர், யானை நெருஞ்சில் இலைகள் சம எடையாக எடுத்துக் கொண்டு, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, மோரில் கலந்து  காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். 
 
அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில்  காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற  மாதவிடாய் சரியாகும்.


No comments:

Post a Comment