mushrooms-with-numerous-medicinal-properties ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட காளான்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 3 September 2021

mushrooms-with-numerous-medicinal-properties ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட காளான்...!!

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட காளான்...!!

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் மருத்துவ பயன்கள் காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால்  உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 
 
காளான் உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக  செயல்படுகிறது. 
 
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 
 
இதயத்தை காக்கும் சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில்  ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். 
 
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்  குணப்படுத்துகிறது. 
 
தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால்  வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment