benefits-of-honey பலன் தரும் தேன் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 15 September 2021

benefits-of-honey பலன் தரும் தேன்

Femina

பலன் தரும் தேன்

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது.

தமிழரின் சித்த மருத்துவ முறையில் (ஆஸ்துமா / அலர்ஜி / சைனஸ்) உடையோர்க்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 தேக்கரண்டி தேனுடன் இரு குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தொண்டைத் தொணியே போய் குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு / வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை அருந்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

தீக்காயங்களை / தோல் புண்களையும் ஆற்றும் கிறுமி நாசினித் தன்மையுடையது. இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. மருத்துவ ஆலோசனைக்குப் பின், வில்வப்பொடியுடன், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் உண்டு. இரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொலஸ்டிரால் குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.

 
வெது வெதுப்பான நீரில் தேன் அருந்த உடல் எடை குறையும் எனும் பரவலான நம்பிக்கைக்கு, வலுசேர்க்கும் ஆராய்ச்சிகள் இன்னும் ஆய்வகத்திலேயேதான் உள்ளன! எனினும், உடல் எடை குறைகிறதோ இல்லையோ, தேனின் அற்புத குணங்களால் உடல் ஆரோக்கியம் கட்டாயம் மேம்படும்.

உணவே விஷமாகிப் போகும் தற்காலத்தில், நோயை வெல்வதை விடுங்கள், ஆரோக்கியத்தை தக்க வைப்பதே சவால்தான் என்றாகிவிட்டது. கேன்சரைத் தடுக்கும், ஈரலை பாதுகாக்கும், இதயத்தைக் காக்கும், சர்க்கரை நோய்கூட வராமல் தடுக்கும் இனிப்பான உபாயம் ஒன்று உண்டென்றால், அது `தேன்` மட்டுமே. 1 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.
சுத்தத் தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்ததூளோ சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும், கவனம் தேவை. வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற்சூட்டைப் பொருத்து உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment