பிராக்கொலி சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள்
நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் பிராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். பிராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச்
சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும்.
பிரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலில் உடலில் இரத்த ஓட்டத்தில் தடையின்றிச் சுற்றிவரும் தேவையற்ற பொருள்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும்
போக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பிராக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பிராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு
வாணிலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில், ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு வதக்கி, பிராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும்போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பிராக்கோலி பொரியல் தயார்.
No comments:
Post a Comment