calcium-helps-to-get-strong-bones- வலுவான எலும்புகளை பெற உதவும் கால்சியம் சத்து...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 3 September 2021

calcium-helps-to-get-strong-bones- வலுவான எலும்புகளை பெற உதவும் கால்சியம் சத்து...!!

Bone Depreciation

வலுவான எலும்புகளை பெற உதவும் கால்சியம் சத்து...!!


மனித உடலுக்கு உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த தாதுப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின்  செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு  கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். நம் உடலில் கல்சியத்தின் பெரும்பகுதி, எலும்புகளிலும்  பற்களிலும் காணப்படுகின்றன.
 
கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை. இதனால் இதயநோய்கள் உண்டாகிறது.
 
கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதனால் நகங்கள் வெளுத்து, பற்கள் தேய்மானம் அடையும். பற்களில் கூச்சம், பற்சிதைவு ஏற்படும்.
 
கல்சியத்தைப் போலவே விட்டமின் ‘டி’ யும் வளரும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். உங்கள் உணவிலிருந்து கிடைக்கும் கல்சியத்தை உங்கள் உடல்  உறிஞ்சியெடுக்க அது உதவிசெய்கிறது.
 
ஹைட்ரோகுளோரிக் அமில pH குறைப்பின் மூலம் கால்சியம் உறிஞ்சு உதவுகிறது. சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விட்டமின் டி யை உருவாக்கமுடியும்.  பத்து முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின் டி சூரியனிலிருந்து கிடைக்கும்.


No comments:

Post a Comment