நோய்களுக்கு தீர்வு தரும் சில பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!
வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும். வில்வப் பழத்தின் காய்ந்த சதையை காயவைத்து பொடித்து இதனுடன் கற்கண்டு தூளையும் சேர்த்த
ு இதை தினமும் உபயோகித்து வரலாம்.
அஸ்வகந்தா பொடியை தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும். அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன்
வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும்.
நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் பொடி செய்து, 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகும்.
நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும். சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று
நோய் குணமாகும்
மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
No comments:
Post a Comment