வால்நட்டில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்களும் அதன் மருத்துவ பயன்களும் !!
வால்நட் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதிலுள்ளது. வால்நட் பருப்பு ருசியானது, அதிக சத்து நிறைந்தது.
வால்நட் பருப்பில் மனிதனின் மன அழுத்தத்தை போக்கும் குணங்கள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். உடலில் உள்ள
அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வால்நட்டில் புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமுள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த பருப்பில் அடங்கியுள்ளது.
வால்நட் பருப்பில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க கூடியது மற்றும்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
100 கிராம் வால்நட்டில், கொலஸ்ட்ரால் 0 கி, சோடியம் 2 மிகி, பொட்டாசியம் 441 மிகி, புரதச்சத்து 15 கி, விட்டமின் A, B, C, D, E, K விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
வால்நட்டில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. வால்நட்டில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. மேலும் செம்பு, டிரிப்டோபான், மற்றும் மாங்கனீஸ் சத்துக்களும் நீக்கமற நிறைந்துள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பை குறைக்கவும், மற்றும் வெளியேற்றவும் உதவுகிறது.
No comments:
Post a Comment