enchanting-spice-idli-in-the-evening மாலையில் மயக்கும் மசாலா இட்லி! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 10 September 2021

enchanting-spice-idli-in-the-evening மாலையில் மயக்கும் மசாலா இட்லி!

femina

மாலையில் மயக்கும் மசாலா இட்லி!

காலையில் சுட சுட சாப்பிடும் இட்லி தெரியும். அந்த இட்லி மிச்சம் ஆனதுனா இட்லி உப்பு செய்ய தெரியும். ஆனால், மசாலா இட்லினா என்ன? செய்ய தெரியுமா? இதே உங்களுக்கான செய்முறை விளக்கம்.
தேவையான பொருட்கள்:

ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
தேவைக்கேற்ப கறிவேப்பிலை, கடுகு
கடலைபருப்பு
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
இட்லி - 5
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும். அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும். கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

No comments:

Post a Comment