தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - பால்
முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும்.
மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது. உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும். மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க,
நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment