தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கான டயெட் - விதைகள்
பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.
இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது. சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீர
ை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment