grape-seed-juice-used-to-cure-many-diseases- பல நோய்களை குணப்படுத்த பயன்படும் திராட்சை விதை சாறு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 9 September 2021

grape-seed-juice-used-to-cure-many-diseases- பல நோய்களை குணப்படுத்த பயன்படும் திராட்சை விதை சாறு !!

Grape Seed Juice

பல நோய்களை குணப்படுத்த பயன்படும் திராட்சை விதை சாறு !!

திராட்சை விதைகளின் சத்தில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் கிடையாது. இந்த திராட்சை விதை சாறு ஓர் இயற்கை உணவு ஆகும். இது நமது உடலிலுள்ள வைட்டமின் சி, விட்டமின் இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.

திராட்சை விதையின் சாறு பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள், பெருந்தமனி தடிப்பு, உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.
 
கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80% உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. ஆனாலும் அவற்றில் சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும்.
 
உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. வைட்டமின் சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது.
 
ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
 
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. மேலும், பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.
 
இரத்தக் குழாய்களில் அடைப்பு, இரத்தக் குழாய் வீக்கம் ஆகியவற்றை கருப்பு திராட்சைப் பழவிதை குறைக்கிறது. இது இரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. மூல நோய் உடையவர்களின் இரத்தப் போக்கை துரிதமாக திராட்சை விதை கட்டுப் படுத்துகிறது. சிறுநீரக செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment