festival-foods-2 விழாக்கால விருந்தோம்பல் 2 - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 10 September 2021

festival-foods-2 விழாக்கால விருந்தோம்பல் 2

femina

விழாக்கால விருந்தோம்பல் 2


கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் என்னென்ன உணவுகள் செய்து விருந்தினர்களை அசத்தலாம் என்று பரிந்துரைசெய்கிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி

பூசணி பச்சடி

மஞ்சள் பூசணியை கிராமங்களில் கண்யாண பூசணி என்று சொல்வதுண்டு. கல்யாண பூசணியில் அல்வா மற்றும் பச்சடி செய்து அசத்துவார்கள். தை மாதத்தில் அதிகமாக மஞ்சள்பூசணி விளைவதால் அந்த மாதம் முழுவதும் வாரத்தில் ஒரு நாள் பூசணி பச்சடி கண்டிப்பாக சமைப்பார்கள்.

தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணி & கால்
கிலோ,
மிளகாய்த்தூள் & ஒரு
தேக்கரண்டி,
மல்லித்தூள் & ஒரு
தேக்கரண்டி,
மஞ்சள்தூள் & கால்
தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் & 5,
கடுகு, உளுத்தம்பருப்பு,
வெந்தயம், கறிவேப்
பிலை, கொத்தமல்லி &
சிறிதளவு,
எண்ணெய், உப்பு &
தேவையான அளவு.

செய்முறை
1. மஞ்சள் பூசணியை துண்டுகளாக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டுஞ் ஒன்றிரண்டாக மசிக்கவும்.
2. கடாயில் எண்ணெயை சூடாக்கிஞ் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளிக்கவும்.
3. மசித்த பூசணியை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி
இறக்கவும்.

கூட்டுக்கறி
த்தாண்டு மற்றும் பொங்கல் நன்நாளில், பசுமையான காய்கறிகளைப் பயன்படுத்தி கூட்டு தயாரித்து சாப்பிடுவது தமிழர்களுடைய தொன்று தொட்ட பழக்கம். இதற்கு கூட்டுக்கறி என்று அழைப்பதுண்டு. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு இந்தக் கூட்டுகறியை செய்து சாப்பிடுவர்.

தேவையானப் பொருட்கள்
வாழைக்காய் 1
முருங்கக்காய் 1
அவரைக்காய் 5
பச்சை மிளகாய் 2
காரட் 1
உப்பு -
1/2 தேக்கரண்டி
தயிர் -1 கப்
தண்ணீர் -
தேவைக்கேற்ப

அரைப்பதற்கு
தேவையான பொருட்கள்
தேங்காய்- 1 மூடி
(துருவியது)
சீரகம்
-1 தேக்கரண்டி
பூண்டு 2 பல்
மஞ்சள் பொடி- 1/2
தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை -
சிறிதளவு
செய்முறை:
1. காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகம், பூண்டு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
2. காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக
கிளறி விடவும்.
கடைசியாக தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். சுவையான கூட்டுக்கறி தயார்.

No comments:

Post a Comment