மன அழுத்தம்... உஷார்
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘ஸ்ட்ரெஸ்’. மன அழுத்தத்திற்கு வயது வரம்பு இல்லை.
எப்படி உருவாகிறது
மனஅழுத்தம் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரியின் மூலம் உடல் அதிக பரபரப்புடன் செயல்படத் தொடங்குகிறது. இதயத்துடிப்பு அதிகரித்து நரம்புகளில் ரத்தத்தை அதிகமாக நிரப்புகிறது. வாய் உலர்ந்து போகிறது.
சுவாசம் வேகப்படுகிறது. உடலுக்கு சக்தி அதிக அளவில் தேவைப்படுவதால் சர்க்கரையும் கொழுப்பும் ஏராளமாக ஈரலில் இருந்து வெளியேறுகிறது. ஜீரணிப்பு நின்று போகிறது. இதன் காரணமாக உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம், உடல், மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.
இதை வெல்ல வழிகள்
அதிகம் புன்னகையுங்கள். சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு செல்கிறது.
வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றுடன் நேரம் செலவழியுன்கள்.
வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை பாருங்கள்.
ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்கிறது.
உங்களுக்கு பிடித்த பாடலை
சத்தம் போட்டு பாடுங்கள்.
மன அழுத்தத்தை குறைக்க மிக முக்கியமான வழி உடற்பயிற்சி.
உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள்.
மன அழுத்தம் என்பது நோயல்ல...
No comments:
Post a Comment