உங்கள் அழகு உங்கள் கையில்
வீட்டு மருத்துவம் என்று வரும் போது ஃபெமினா வாசகர்கள், ஒரு நிஞ்சா போலவே கைத்தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குழந்தை பிறப்புக்கு பிறகு எடை போடுவதில் துவங்கி, எல்லாவற்றுக்கும் எளிய தீர்வு வைத்திருக்கின்றனர். இவற்றைக் கண்டறிகிறார் ஈவா பவித்ரன்.
பிரியங்கா மோகன், தொலைக்காட்சி நட்சத்திரம், கொச்சி
நிஞ்சா குறிப்பு: தண்ணீர் சேருவதை வெள்ளரிச் சாறு மூலம் எதிர்கொள்ளலாம்.
படப்பிடிப்பில் பங்கேற்கும் போது பிரியங்காவால் ஒழுங்காக சாப்பிட முடிவதில்லை. மேலும் அவரால் வாரம் சில நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய முடிகிறது. “பீரியட் சுழற்சியின்போது பல பெண்களுக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்ந்துவிடுகிறது. மேலும், என்னுடைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக சற்றே சோம்பல்
மற்றும் சதைப்பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் தான் அம்மா என்னிடம் வெள்ளரி சாற்றை முயன்று பார்க்க கூறினார். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதோடு, வயிற்றுப்பகுதியையும் தட்டையாக்குகிறது” என்கிறார் பிரியங்கா.
பருமனை குறைக்க பிரியங்கா தரும் குறிப்பு
மிக்சியில் ஆறு கோப்பை தண்ணீர், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், ஒரு வெள்ளரி, எலுமிச்சை (துண்டுகளாக) மற்றும் புதினா (அரை கோப்பை)
இலைகளை போட்டு நன்றாக அடித்து கலக்கவும். இந்த சாற்றை இரவு எடுத்து வைத்து மறுநாள்
முழுவதும் அவ்வப்போது அருந்தவும். இது புத்துணர்ச்சியை அளித்து லேசாக உணர வைக்கும்.
சுகன்யா வெங்கட்ராகவன், நூல் ஆசிரியர், மும்பை
நிஞ்சா குறிப்பு: இஞ்சி டீ மூலம் மூக்கடைப்புக்கு தீர்வு
நகரங்களில் மாசு காரணமாக மூக்கடைப்பு ஏற்படுவது சகஜமானது. இதற்கு உணவுப் பழக்கம் அல்லது அதிக காரம்கூட காரணமாக இருக்கலாம். உடலில் அதிகமாக சளி உற்பத்தியாகி அது தொண்டை பகுதியில் அடைத்துக்கொள்ளும் போது இந்த சிக்கல் ஏற்படுகிறது. “மோசமான பாதிப்பு ஏற்பட்டு என்னை படுத்தி எடுக்கும்” என்கிறார் சுகன்யா. ‘‘இருமல் இடைவிடாமல் உண்டாகும். சைனஸ் பாதிப்பு காரணமாக காதுக்குள்ளும் பிரச்சனை இருக்கும். இதனால் மூச்சுவிடுவதும் கடினமாக இருக்கும். மருந்துகளும் பலன் தராது. இந்த நிலையில் தான் வீட்டில் உள்ள மருந்தின் உதவியை நாடினேன்”.
மூச்சு விடும் பிரச்சனைக்கு சுகன்யாவுன் தீர்வு
மூன்று பெரிய துண்டு இஞ்சியை, அடர்த்தியான கலவையாகும் வரை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்
. இதற்கு 7 நிமிடங்கள் ஆகலாம். அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைத்து, ஆர்கானிக் மஞ்சள் சேர்ந்து, சிறிது தேன்&எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
குறிப்பு: மஞ்சள் சேர்த்த பிறகு கொதிக்க வைக்க வேண்டாம். மேலும் இஞ்சிதான் முக்கியம். ஆர்கானிக் மஞ்சளை உள்ளூர் கடையில் அல்லது ஃபேப் இண்டியாவில் எளிதாக வாங்கலாம்.
ஸ்னுஷா ஜித்தேஷ், இல்லத்தலைவி, துபாய்
நிஞ்சா குறிப்பு: குழந்தை பிறப்புக்கு பின் எடை கூடியதை உணவு கட்டுப்பாடு மற்றும் ஸ்டாட் பைலேட்ஸ் மூலம் சமாளித்தது.
இரண்டு குழந்தைகள் மற்றும் விமானத்தில் பறக்கும் கணவர் என ஸ்னுசாஷாவுக்கு நேரம் சரியாக இருந்தது. இரண்டு பிரசவங்களின் போதும் அவருக்கு கணிசமாக எடை கூடியது. ஆனால், கூடுதல் எடையை குறைக்க அவர் கடினமான உணவுக் கட்டுப்பாடு அல்லது மாத்திரைகளை நாடவில்லை. மாறாக என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினார். “முதல் பிரசவத்தின் போது 7 கிலோ வரை கூடுதல் எடை உண்டானது. மேலும் சிசேரியனுக்குப்பிறகு கடும் முதுகு வலியும் இருந்தது. எடை இதை மோசமாக்கியது. இரண்டு பிரச்சனைகளையும் சமாளிக்கும் உடற் பயிற்சியைத் தேடினேன்” என்கிறார் அவர்.
ஜோசப் பைலேட்ஸ் உண்டாக்கிய பயிற்சி முறையான ஸ்டாட் பைலேட்ஸ் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். இது அவரது எடையை குறைக்க உதவியதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் அளித்துள்ளது. ஆரம்பத்தில் அவரது எடை அதிகம் குறையவில்லை. “சிறப்பு பயிற்சியாளர் ஒருவருடன் ஆலோசனை செய்த பிறகு நான் சமமான உணவுக்கு மாறினேன். இது எடை குறைப்பில் மிகவும் உதவியது” என்கிறார் அவர்.
ஸ்னுஷாவின் உணவுக் கட்டுப்பாடு வழி
- விடியற்காலையில் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீர்.
- அதிக புரதம் கொண்ட காலை உணவு. பெரும்பாலும் முட்டை வெள்ளைக்கரு மற்றும் டோஸ்ட் கொண்டது. சைவம் என்றால் உப்புமா அல்லது தோசை.
- நண்பகலில் ஒரு கப் தேநீர் .
- மதிய உணவுக்கு வேகவைத்த காய்கறிகள்
- பகலில் பழம் அல்லது கொட்டைகள் ஸ்னேக்ஸ்
- டின்னருக்கு சூப் அல்லது சாலெட்
- தினமும் சர்க்கரை இல்லாத கேரட், தர்பூசணி, மாதுளை அல்லது ஆரஞ்சு பழச்சாறு
- எப்போதாவது இஞ்சி புதினா டீ.
அஞ்சனா ஞானதுரை, அனலிஸ்ட், சென்னை
நிஞ்சா குறிப்பு: கருத்த உதடுகள் பிரச்சனைக்கு தீர்வு
அஞ்சனாவால் லிப்ஸ்டிக் அல்லது லிப்கிளாஸ் போடாமல் வெளியே செல்ல முடியாது. நாளடைவில் உதடுகள் கறுப்பாவதை கவனித்தார். “எனக்கு மாநிறம் என்பதால், எப்போதும் சிவந்த உதடுகள் கிடையாது. எனக்கு புகைக்கும் பழக்கமும் இல்லை. எனவே உதடுகள் கருப்பாவது ஏன் என புரியவில்லை. பின்னர் சரும நல வல்லுனரை பார்த்த போது, லிப்ஸ்டிக் வண்ணம் ஒன்றுக்கு ஒவ்வாமை இருக்கிறது என்றார். இதனால் அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மிட்டிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். இதனால் நிறம் மாறியிருக்கிறது என்றும் இதற்காக ரசாயன பீலிங் செய்துகொள்ளுமாறு கூறினார். பின்னர் என் தோழி ஒருவரை சந்தித்த போது, அவரது பாட்டி சொன்ன வைத்தியம் நல்ல பலனைத்தந்தது”.
அஞ்சனாவின் மலாய் லிப் பேக்
ஒரு ஸ்பூன் தேனில் இரண்டு எலுமிச்சை சேர்க்கவும். இதை முதலில் உதட்டில் தடவிக்கொள்ளவும். இதைத்தொடர்ந்து புதிய பால் கிரீம் (மலாய்) பூசிக்கொள்ளவும். இதமான தண்ணீரில் 10 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும். தினமும் செய்து வந்தால் உதடு சிவப்பாகும்.
No comments:
Post a Comment