how-to-take-care-of-pcos-syndrome-with-home-remedies கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 4 September 2021

how-to-take-care-of-pcos-syndrome-with-home-remedies கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிகள்

inner 1

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிகள்



மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

காரணம் :

இந்நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.


விட்டமின்கள் : பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது விட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் விட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

ஆப்பிள் சிடர் வினிகர் : ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படிக் குடிப்பதனால் உடலில் இன்ஸுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.
தேங்காய் எண்ணெய் : சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழு பலன் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்ஸுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதே போல கெட்டக் கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.


ஆமணக்கு எண்ணெய் : ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை என்னில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுருப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது, இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

No comments:

Post a Comment