iluppai-malari-maruttuva-payaka(இலுப்பை மலரின் மருத்துவ பயன்கள்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 24 September 2021

iluppai-malari-maruttuva-payaka(இலுப்பை மலரின் மருத்துவ பயன்கள்!)

femina

இலுப்பை மலரின் மருத்துவ பயன்கள்!

இலுப்பை மரவகையைச் சேர்ந்தமரம். இது வண்டல் மண், மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 - 20 செ.மீ. இருக்கும், அகலம் 2.5 - 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில் களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் பூக்கள் 2.5 - 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 - 5 செ.மீ. நீளமிருக்கும். இந்த மரத்தை ஆங்கிலத்தில் HONEY TREE & BUTTER TREE என்று சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலைகள்உதிர்ந்து விடும். இலுப்பை ஜனவரி,பிப்ரவரி, மார்ச்சு மாத த்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் விடும். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 - 200 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். தேங்காய்எண்ணெக்கும், நெய்யுக்கு பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணையைப் பயன் படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 - 2.5 செ.மீ. ஆழத்தில் நடுவார்கள், ஈரம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்க வேண்டும். பின் 15 நாட்களில் முளைக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் வேண்டிய இடங்களில் நடலாம்.இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும். இது தலைவலியைப் போக்கும். நீரிழிவைக் குணமாக்கும்.

No comments:

Post a Comment