கண் பார்வையை மேம்படுத்தும் இயற்கை காய்கனிகள்
1. வைல்ட் ரோஸ் டீ
கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது.
2. கொத்தமல்லி இலைகள்
கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.
3. கேரட்
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.
4. ப்ரோக்கோலி
கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
5. மீன்
மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.
6. அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்
கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ
லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.
7. பெரிஸ்
இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் சத்துக்கள் உடம்பில் புது செல்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வையை மேம்படுத்தும்.
No comments:
Post a Comment