சூப்பர் பெண்மணிகளுக்கான உணவுகள்
பளப்பளப்பான கூந்தல் மற்றும் பொலிவான சருமத்தின் ரகசியம் உங்கள் மேக்-அப் கேஸில் மட்டும் இருப்பதில்லை. அது உங்கள் டயட்டிலும் அடங்கியுள்ளது. பல பலன்களைத் தரும் இந்த சூப்பர் உணவுகள், நோய்களை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களை தருவதோடு, ஆரோக்கியமாகவும், எனர்ஜியுடனும் இருப்பதற்கும் உதவுகின்றன. கூடவே, உங்கள் தினசரி டயட்டில் இவற்றைச் சேர்த்து கொள்வதும் மிகவும் எளிது.
பெர்ரி உணவுகள்
பெர்ரி வகை பழங்களில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஃபைபர் நிரம்பியுள்ளது. ஃபைபர் உங்கள் வயிறு நிரம்பிய உணவை நீடித்திருக்க செய்யும், குறைவாக சாப்பிடுவதற்கும் உதவும். பெர்ரி பழங்களில் நோய்களை எதிர்த்து போராடக் கூடிய
ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகம்.
ஹெல்த் டிப்ஸ்: தினமும் ஃபிரெஷ், டின்களில் அடைக்கப்பட்ட மற்றும் உலரவைக்கப்பட்ட பெர்ரி பழங்களை சாப்பிடுங்கள்.
நட்ஸ்
பாதாமோ, முந்திரியோ அல்லது நிலக்கடலையோ எல்லாமே கண் பார்வையை மேம்படுத்த வும், நினைவுத் திறனை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகின்றன.
ஹெல்த் டிப்ஸ்: ஊற வைத்து சாப்பிடும்போது, இந்த கொட்டைகள் முளை விடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் உடையவையாக மாறி விடுகின்றன.
விதைகள்
சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள் மற்றும் எள் போன்றவை நிறைவுறா கொழுப்பு நிறைந்துள்ள இயற்கை மூலப்பொருட்கள். சுவையும், மொறு மொறுப்பும் நிறைந்த சூரியகாந்தி விதைகளில் ஆற்றல் அதிகம் உள்ளது. குறிப்பாக இவற்றில் பி-&காம்ப்ளெக்ஸ் சத்துகளும், ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது.
பூசணி விதைகளிலும், ஏராளமான சத்துகள் உள்ளன. அவற்றில் உறக்கத்தை மேம்படுத்தும், அமினோ அமிலம் உள்ளது. மேலும், இதில் மெக்னீசியம் என்ற மற்றொரு இயற்கையான உடலை ரிலாக்ஸ் செய்யும் உட்பொருளும் உள்ளது. நாள் முழுவதும், ஸ்னாக்காக சாப்பிட்டால், இதில் உள்ள எளிதாக செரிக்கும் புரதம், ரத்த சர்க்கரையை நிலைப் படுத்தவும் உதவுகிறது.
ஹெல்த் டிப்ஸ்: லஞ்ச் நேர சாலட்களின் மேல் தூவி சாப்பிடுங்கள
No comments:
Post a Comment