ஆரோக்கியமான வழிகளில் எடையைக் குறைத்திடுங்கள்
திருமண நாள் என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். அன்று நீங்கள் மிகச்சிறப்பாக உணரவும், தோற்றமளிக்கவும் வேண்டியது அவசியம். உடலை ரொம்பவும் வருத்திக்கொள்ளாமல், ஆரோக்கியமான வழிகளில் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்
எல்லா மணப்பெண்களுக்குமே தங்கள் திருமண நாளன்று மிகச்சிறப்பாக தோன்ற வேண்டியது அவசியம். அதற்காக சாப்பிடாமல் இருப்பது, டயட் மாத்திரைகளையும் கொழுப்பைக்
கரைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வதும் தவறு. இதில் மோசமான பின்விளைவுகள் உண்டு. இவ்வாறெல்லாம் செய்தால், திருமணமான ஒரு ஆண்டுக்குள் சராசரியாக 10 கிலோ வரை எடை அதிகரித்துவிடும். -அதாவது ஏறத்தாழ திருமணத்திற்கு முன்பாக நீங்கள் குறைத்த அதே அளவு எடை மீண்டும் கூடும். “கிராஷ் டயட்டிங் என்று கூறப்படும் உணவுக் கட்டுப்பாடுதான் மணமகளாகப் போகிறவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம். இதன் பின்விளைவால் சருமம், கூந்தல், நகங்கள் என்று எல்லாம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும்” என்கிறார் மும்பையின் சரும மற்றும் அழகு பராமரிப்பு மையமான பிளஷ் கிளினிக்ஸைச் சேர்ந்த டயட்டீஷியன் விபா கபாடியா.
பெரும்பாலான இளம் மணமகள்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிடுகிறார்கள்.
அதற்கு பதிலாக எடையை குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். “மணமகள்கள் கச்சிதமான தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை அது ஒல்லியாகத் தோற்றமளிப்பதுதான் கச்சிதம். திருமணத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே நீங்கள் சரியான எடையை அடைந்து விட வேண்டும் என்கிறார் ஃபிட்னஸ் எக்ஸ்பர்ட்டும், தி டோண்ட் டயட் குக்புக்கின் ஆசிரியருமான சுமனா அகர்வால், “திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்து தீவிரமான உணவுக்கட்டுப்பாடு எதையும் பின்பற்றக் கூடாது” என்கிறார் அவர்.உடலின் கொழுப்பை இழக்க வேண்டும், தசைகளை அல்ல
நீங்கள் டயட்டில் இருக்கும்போது தசைகள் குறைந்து போனால், நீங்கள் தளர்வடைந்து விடுவீர்கள். அதோடு, உடல் எடையும் விரைவாக பழைய நிலைக்கு சென்றுவிடும். மாதம் 3 கிலோ வரை குறைப்பது ஆரோக்கியமானது. ஆனால் பல பெண்களுக்கு இது போதுமானதாகத் தெரிவதில்லை. நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை அதிகரிப்பதன் மூலம் அல்லது கலோரி உட்கொள்வதை குறைப்பதன் மூலம் எடை இழப்பை வேகமாக்கலாம். நீங்கள் 15 கிலோ வரை எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினால், திருமணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தயார் செய்துகொள்ள வேண்டும்.
திருமண நாளின் அழுத்தம்கூட எடையைக் குறைப்பதைக் கடினமாக்கும், ஏனெனில் மன அழுத்தம் நம்மை அதிகமாக சாப்பிட வைக்கும். எந்தவொரு நிலையிலும், ஸ்மார்ட்டான டயட்டுக்கு மாறுவது என்பது லைஃப்ஸ்டைலில் செய்யும் மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வில் ஒருமுறை மட்டும் செய்யக்கூடியதாக இருக்க கூடாது.
ஆரோக்கியமான, புத்திசாலித் தனமான டயட்டை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற உறுதியேற்றிடுங்கள். புத்திசாலித்தனமான டயட் என்பது காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த பால் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், கொட்டைகள் மற்றும் விதைகள், மீன் மற்றும் ஓரளவு இறைச்சி ஆகிய அனைத்தும் கொண்டதாக இருக்க வேண்டும். ரத்த சோகை, வைட்டமின் பி12 மற்றும் தைராய்டு சோதனைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்காக ஒரு திட்டத்தை தீர்மானித்து, அதை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். “நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே உங்கள் எடை இழப்பு இலக்கு என்ன என்பதை சரியாக தீர்மானித்து விடுங்கள், அதை நோக்கி மெதுவாக முன்னேறுங்கள்,” என்கிறார் விபா. பாதுகாப்பான எடை குறைத்தல் முறை என்பது, ஒரு வாரத்துக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைப்பதாகும். இந்த இலக்கை அடைவதற்கு, நீங்கள் உட்கொள்வத
ை விட அதிகமாக தினமும் 500 முதல் 1,000 கலோரிகளை இழக்க வேண்டும். கடைசி இரண்டு வாரத்தில் தேவைக்கதிகமான உடற்பயிற்சிகள் செய்வது, கிராஷ் டயட்டில் இருப்பது போன்றவற்றுக்கு இது நல்ல மாற்று வழி. சரியான விகிதத்தில் எடையை குறைப்பது அவசியம். இதனால் உங்கள் ஆரோக்கியமும் கெடாது. மேலும் மெதுவாக எடையைக் குறைப்பதால், நீங்கள் மீண்டும் எடையை விரைவாக அதிகரிக்காமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
சாத்தியமான இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள்
உங்களால் முடியும் என்று நினைக்கும் இலக்குகளை மட்டும் அமைத்துக் கொள்ளுங்கள். ‘நான் 20 கிலோ குறைக்க வேண்டும்’ என்று சொல்லா தீர்கள். நான் ஒரு மாதத்தில் 3 கிலோ குறைக்க வேண்டும் என்று சொல்லுங்கள். -குறைந்த காலத்தில் எடையைக் குறைத்தாக வேண்டிய கட்டாயம் இருந்தால், கலோரிகளைக் குறைத்து, புரோட்டீனை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள், மேலும் ஒரு நாளைக்கு 1,200 கலோரிகளுக்கு குறைவாக உட்கொள்ளாதீர்கள். இதை திருமண நாளுக்கு ஒரு வாரம் முன்பு வரை செய்யலாம். நினைவிருக்கட்டும், நீங்கள் ஃபிட்டாக தோன்றவே விரும்பு கிறீர்கள், நோயாளியைப் போல அல்ல.
No comments:
Post a Comment