இயற்கை உணவில் இருக்கும் நச்சை விரட்டுங்கள்
வழக்கமாக கடைகளில் இருந்து வாங்கும் புதிய பழங்கள், காய்கறிகள் கூட எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அனிந்திதா கோஷ் கண்டறிகிறார்.
இயற்கை பொருட்களை சாப்பிடுவது ஃபேஷனாகி வரும் காலம் இது. ஆனால் பழங்கள், காய்கறிகள் போன்ற பதப்படுத்தப்படாத, இயற்கையான பொருட்களை உட்கொள்ளும் போது நம்மை அறியாமலேயே நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், பலவகையான கிருமிகள், நச்சுக்குகளுக்கு இலக்காகிறோம். “ஃபுட் பாய்சனிங் நச்சுக்கள் கலந்த இயற்கைப் பொருட்களால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவை கொண்ட வயிற்று பாதிப்பு உண்டாகலாம்.
நச்சு கலந்த உணவை சாப்பிட்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் இந்த அறிகுறிகள் உண்டாகலாம். இது கல்லீரலில் ஹெப்பாடிடிஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்கிறார் கேஸ்ட்ரோயெண்டிராலஜி வல்லுனர் டாக்டர் ரஜ்னீஷ் மோங்கா.
மண்ணிலிருந்து நேரடியாக...
தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான டினா குமார் சமீபத்தில் கீரைகளில் இருந்த சல்மோனெல்லா ஏற்படுத்திய தாக்கத்தால் குடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். “சாலெட்டில் வைக்கப்பட்ட இளசான கீரை இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார் அவர்.
பழங்கள், காய்கறிகள் பல வகையான நச்சுக்களை கடந்த பிறகே நம்மை வந்தடைகின்றன. நச்சுத்தன்மை கொண்ட மண்ணில் துவங்கி, உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை தெளிக்கப்பட்டு, அழுக்கு கோணிகளில் வைக்கப்பட்டு,
சுகாதாரமில்லாத டிரக்குகளில் கொண்டுவரப்படுவது வரை நமது உணவு பொருட்கள் நீண்ட பயணம் மேற்கொள்கின்றன.
கடைகளில் ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப் பாக இருப்பதற்காக அவற்றின் மீது மெழுகு பூசப் படுகிறது. மாம்பழம், பப்பாளி, தர்பூசணி போன்றவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.
வீட்டில் இருக்கும் போது
பழங்கள், காய்கறிகளை தூய்மையாகவும், நச்சுக்கள், கிருமிகளில் இருந்து பாதுகாப்பாக வைப்பது முடியாத ஒன்று அல்ல. இதோ டிப்ஸ்:
கழுவுங்கள்: இது மிகவும் எளிமையானது. ஆனால் முக்கியமானது. காய்கறிகளை பயன்படுத்தும் முன் நன்றாக கழுவுவது ஆபத்தான இ-கோலி உள்ளிட்ட கிருமிகளை மேல் பகுதியில் இருந்து அகற்றுகிறது. தண்ணீரில் கழுவுவதற்கு முன் மேலே ஒட்டியுள்ள மண் துகள்களை தட்டிவிட்டு பின்னர் நீரில் அலசவும். அதன் பிறகு துடைத்தால் எஞ்சியுள்ள நச்சுக்களும் அகற்றப்படும். தேவை எனில் அதிக வீரியம் இல்லாத ப்ளீச் கலவயை (3 லிட்டர் நீரில் 1-&3 ஸ்பூன் 5.25 சதவீத குளோரின் ப்ளீச்) பயன்படுத்தலாம். அதன் பிறகு மறக்காமல் சாதாரண நீரில் அலச மறக்க வேண்டாம்.
சமைப்பது/உரிப்பது: தோலை உரிப்பது, வேக வைப்பது பழங்கள், காய்கறிகளின் மீதுள்ள கிருமிகளை அகற்றுகிறது. நுண் கிருமிகள், பூச்சிக்கொல்லிகள்
ஊடுருவலாம் என்பதால் தோலை உரித்த பிறகும் தண்ணீரில் கழுவுவது நல்லது என்கிறார் டாக்டர் மோங்கா.
உடனே பயன்படுத்துங்கள்: பழங்கள், காய்கறிகளை தனித்தனியே வைக்க வேண்டும். அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்காமல் முடிந்தவரை உடனே பயன்படுத்தவும். அழுகிய பழங்களுடன் வைக்கப்படும் போது நல்ல உணவும் பாதிக்கப்படலாம்.
நச்சு நீக்கம்: காய்கறிகளை நறுக்கும் போது, அவற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கிவிடவும் என்கிறார் டாக்டர் மோங்கா. “தர்பூசணி போன்ற வெட்டி வைக்கப்பட்டுள்ள பழங்களை வாங்குவதை தவிர்த்து புதிதாகவும், நிறம், வடிவம் கொண்ட பொருட்களை வாங்கவும்.அதிகம் பளபளப்பாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும். அவை செயற்கையான பூச்சாக இருக்கலாம்”.
வெளியே சாப்பிடும் போது
வீட்டில் பொருட்களை பாதுகாப்பதிலும், பயன்படுத்துவதிலும் நம்மால் கவனமாக இருக்க முடியும். ஆனால், ரெஸ்டாரண்டில் சமையலறை வரை போய் சென்று நம்மால் பார்க்க முடியுமா என்ன? கெட்டுப்போன உணவை கண்டுபிடிக்க மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார் தில்லியின் டிரெஸ் பார் அண்ட் ரெஸ்டாரண்ட் இணை உரிமையாளரும் தலைமை சமையல் கலைஞருமான ஜதீன் மாலிக். இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். “உணவை முகர்ந்து பாருங்கள். உணவு சரியில்லை என்றால் உங்கள் மூக்கு சொல்லிவிடும்.”
1. சாலெட்டில் வதங்கிய அல்லது செயற்கை சாயல் கொண்ட தழைகள் இருந்தால் அது எச்சரிக்கை அறிகுறி. அவற்றை குளோரின் கொண்டு சுத்தம் செய்திருக்காவிட்டால் கிருமிகள் அதிகம் இருக்கலாம்.பருவமழைக்காலங்களில் கீரை இலைகள் கொண்ட சாலெட்களை தவிர்ப்பது நல்லது. அவற்றில் எளிதில் அகற்ற முடியாத நுண்கிருமிகள் இருக்கலாம்.
2. உங்கள் உணவில் பலவித வாசனைகள் வருகின்றனவா? கெட்டுப் போனதை மறைக்க பல கூடுதல் வாசனைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
3. பாதி வேகவைக்கப்பட்ட வெங்காயம், தக்காளி எளிதில் கெட்டுப்போகலாம். எனவே, தக்காளி சாஸ் கொண்ட பாஸ்டா ஆர்டர் செய்தால் எச்சரிக்கையாக இருக்கவும். முழுவதும் சமைக்கப்படாத சாஸ் கொண்ட நூடுல்ஸ்கூட பாதுகாக்கப்படாவிட்டால் கெட்டுப்போகலாம்.
4. கேக் போன்ற டெசர்ட்கள் கெட்டியாக இருந்தால் பழையது என்று பொருள்.
No comments:
Post a Comment