know-all-about-cholesterol கொழுப்பை பற்றிய உண்மைகளும் கட்டுக்கதையும் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 4 September 2021

know-all-about-cholesterol கொழுப்பை பற்றிய உண்மைகளும் கட்டுக்கதையும்

femina

கொழுப்பை பற்றிய உண்மைகளும் கட்டுக்கதையும்


நீங்கள் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று உங்கள் நண்பர்கள் சொல்கிறார்களா? அது ஏன் முற்றிலும் தவறு என்று சொல்கிறார் உப்னீத் பன்சாரே

கொழுப்புகள் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் என்று பிரிக்கப் பட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த நியூட்ரீஷியனிஸ்டான டாக்டர். மீனா, “நிறைவுற்ற (சாச்சுரேட்டட்) மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் கெட்ட கொழுப்புகள் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் நிறைவுறாத (அன்சாச்சுரேட்டட்) - மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நல்ல கொழுப்புகள் என்று கருதப்படுகின்றன. ஏனென்றால் இவை உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன, இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். நல்ல கொழுப்பைப் போதுமான அளவுகளில் சாப்பிடவில்லை என்றால், கடுமையான நாள்பட்ட சோர்வு மற்றும் உடல்பருமன் போன்றவை ஏற்படக் கூடும். கெட்ட் கொழுப்புகளை விட இவற்றில் குறைவான கலோரிகளே உள்ளன என்பது கூடுதல் தகவல்”  என்கிறார்.

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்

உங்கள் தினசரி உணவில் அதிகமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்க வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் கொலஸ்ட்ரால் எஜுகேஷன் திட்டம் ,  தினசரி உணவில் 20 சதவீதம் வரை மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

இவற்றில் இருக்கிறது: கனோலா எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ்கள், ஆலிவ் ஆயில், அவகாடோ, சாஃப்ளவர், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய், பாதாம், முந்திரி மற்றும் நிலக்கடலை போன்ற கொட்டைகள்.

ஹெல்த்தி ட்விஸ்ட்: வெண்ணெய்க்கு பதிலாக மார்கரைனைப் பயன்படுத்தவும், இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளன. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை உங்கள் உணவை சமைக்கவும், வதக்கவும் பயன்படுத்தவும், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலில் சமைப்பதைத் தவிர்க்கவும். உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு பதிலாக கொட்டைகளை ஸ்னாக்காக பயன்படுத்துங்கள்.

 எச்சரிக்கைகள்:
”கெட்ட கொழுப்புகளுக்கு பதிலாக மட்டுமே நல்ல கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும், இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது தவறு. அதேபோல பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பை மிக அதிகமாக சாப்பிட்டல் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவும் குறைந்து விடும். மிகவும் அதிகமாக சாப்பிடுவதால் சில வகையான கான்சர்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். கார்ன், சோயா, சாஃப்பளவர் மற்றும் கனோலா போன்ற சில வெஜிடபிள் ஆயில்களில் சமைக்கும்போது ட்ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் உருவாவதால் அவையும் தவறாக போய்விட வாய்ப்புள்ளது. இதனால் மார்பக புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்” என்று எச்சரிக்கிறார் டாக்டர். மீனா.

No comments:

Post a Comment