ஜாம் vs மர்ம்லேட்
ஜாமும் மர்மலேடும் பழங்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. சரி, இரண்டில் சிறந்தது ஜாமா அல்லது மர்மலேடா? இந்த சவாலுக்கு பதிலளிக்கிறார் ஸ்நேஹா உல்லல்
ஜாம்
இதில் இருப்பது: ஆப்பிள், ஸ்ட்ராபெரி, மாம்பழம், செரி-எல்லா பழங்களுமே நல்லதுதான். எல்லாப் பழங்களில் இருந்தும் சிறிதளவு கலந்திருந்தாலும் நன்றாகவே இருக்கும்.
எப்படி சாப்பிடுவது: சீஸையும் ஜாமையும் சேர்த்து சாப்பிட
முடியாதுதான், ஆனால், ஒரு ஜாம் சாண்ட்விச்சின் ஒரு ஸ்லைஸில் மட்டும் கிரீம் சீஸைச் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்!
எது சிறந்தது: விரவக் கூடிய தாகவும், ஓரளவுக்கு ஜெல்லியைப் போன்ற திண்மையாகவும் இருக்க வேண்டும். ஆனால் பழத் துண்டுகள் இருக்கக்கூடாது.
பிரச்சினைகள்
ஜாமில் உள்ள அதிக சர்க்கரை யின் காரணமாக, நீரிழிவு நோயுள்ளவர்களும் ஹைபோகிளை சமிக்ஸ் உள்ளவர்களும் ஜாமைத் தவிர்க்க வேண்டும். “மேலும் ஜாம் உருவாக்கும் செயல்முறை யின்போது, பழங்களில் உள்ள சில ஊட்டச்சத்துகள் இழக்கப் படுகின்றன” என்கிறார் ரிச்சா.
மர்மலேடு
இதில் இருப்பது: ஆரஞ்சு, கிச்சிலிக்காய், எலுமிச்சை அல்லது திராட்சை போன்ற
சிட்ரஸ் பழங்கள்.
தடவி சாப்பிடுங்கள்: தேனுக்கு பதிலாக மர்மலேடை தடவி சாப்பிட்டுப் பாருங்கள்.
எது சிறந்த மர்மாலேடு: தடவக்கூடிய அளவுக்கு திண்மையாக, மிருது வான பழத்துண்டுகளுடன் இருக்க வேண்டும். அதிக இனிப்பு, அதிக கசப்பு இருக்கக் கூடாது.
பிரச்சினைகள்
மிதமான அளவு சாப்பிட்டால் எந்த மோசமான பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படாது. இதிலுள்ள லேசான கசப்புச்சுவையை பலரும் விரும்புகிறார்கள்.
No comments:
Post a Comment