சருமத்திற்கு கேல்
கேல் (ஒரு வகை கீரை) வைட்டமின்கள் நிறைந்த ஒரு வகை கீரையாகும், வைட்டமின் சி, ஏ மற்றும் கே இதில் நிறைந்திருக்கின்றன.. நேரடியாக சருமத்தில் பூசும்போது, இது கருத்துப்போவதையும், வெயிலால் ஏற்படும் மங்குதல்களையும்,
சருமத்தில் வயதாவதன் அறிகுறிகளையும் சரிசெய்கிறது. உங்களுக்கு கருவளையங்களும் வறண்ட சருமமும் இருந்தாலும், கைப்பிடியளவு கேல் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும்.
தேவையான பொருட்கள்
1. 1 கப் நறுக்கிய கேல்
2. 2 மேசைக்கரண்டி தேன், 1/2 கப் தண்ணீர்
எப்படி செய்வது
1. கேல் கீரையில் தேன் மற்றும் தண்ணீர் சேர்க்கவும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும், இந்தக் கலவை மெல்ல மெல்ல ஒரு பச்சை நிற திரவமாக மாறும் வரை அரைக்கவும்.
2. வடிகட்டியால் ஜூஸை மட்டும் தனியாகப்
பிரித்துக் கொள்ளவும்.
3. இந்த ஜூஸை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
No comments:
Post a Comment