மருதாணியின் மருத்துவ பயன்கள்!
மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன.
1.மருதாணி இலையை வெறும் அழகுக்காக மட்டும் பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது.
2.மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.
femina
3.மருதானியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
4. இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தானுங்க!
5.மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
6. மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை,
மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும்.
7. சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்தநெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம். கிடைக்கும்.
8 அக்னி நக்ஷத்திர வெயிலில் உடல் சூடு காரணமாக பல தோல் நோய்கள் வரும் நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மருதாணியை கைகளிலும் உள்ளங்காலிலும் பயன்படுத்தினால் உடலின் சூடு தனிந்து வெம்மை நோயிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment