லிச்சி பழத்தின் கோடைகால பயன்கள்!
கோடைக்காலத்தில் வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஓர் பழம் தான் லிச்சி. சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த லிச்சி இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் கோடைக்காலத்தில் விலை மலிவில் கிடைக்கும். பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
தற்போது இப்பழம் தென்னிந்தியாவின் சூப்பர் மார்கெட்டுகளில் அதிகம் கிடைப்பதைக் காணலாம். இப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும்.லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
-
லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.
லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத்
தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு. லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.
No comments:
Post a Comment