கோடை தர்பூசணியின் மருத்துவ பண்புகள்
கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. தர்பூசணி 92 விழுக்காடு தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இனிப்பு கலந்த சாறு நிறைந்த சதைப்பகுதியையும் குளிர்ச்சியையும் நாம் உணரலாம்.
இது, வெப்ப மண்டலம் மற்றும்
மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் சீனாதான் இப்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகின் தர்ப்பூசணி உற்பத்தியில் ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக சீனா செய்கிறது. இப்பழம் கொடி வகையைச் சார்ந்த தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. பயிர் செய்த சில நாட்களில் மஞ்சள் நிறப்பூ இத்தாவரத்திலிருந்து பூக்கிறது.
இப்பழத்தின் வெளிப்புறம் மஞ்சள் கலந்த பச்சைநிறத்தில் வெள்ளை நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. இப்பழத்தின் உட்புறம் வெளிர் சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் சாறு நிறைந்த சதைப்பகுதியினைக் கொண்டுள்ளது. இப்பழம் கறுப்புநிறக் கொட்டைகளை சதைப்பகுதியில் கொண்டுள்ளது. இப்பழம் உருண்டை, நீள்வட்டம், வட்ட வடிவங்களில் காணப்படும்.
தர்ப்பூசணியில் உள்ள சத்துக்கள்:
விட்டமின்கள் ஏ,சி, தயாமின்(பி1), நியாசின் (பி3),
பான்தோனிக் அமிலம் (பி5), பைரிடாக்ஸின் (பி6), இ, போலேட்டுகள், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள், ஆல்பா கரோட்டீன், பீட்டா கரோட்டீன், லைக்கோபீன்கள், கோலைன், சிட்ருலின், லுடீன்-ஸீக்ஸாக்னை போன்றவைகள் உள்ளன.
No comments:
Post a Comment