medicinal-uses-of-cinnamon(இலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 25 September 2021

medicinal-uses-of-cinnamon(இலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்)

femina

இலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்


இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.
இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.

இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன. ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.

No comments:

Post a Comment