medicinal-benefits-of-kazharchikkay(கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 25 September 2021

medicinal-benefits-of-kazharchikkay(கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்)

femina

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்


தாவரங்களில் மரம், செடி, கொடி, கிழங்கு என பலவகைகள் உள்ளன. இதில் பிற மரங்களையோ அல்லது பிற பொருட்களை பற்றி வளரும் தாவரங்களை கொடிகள் எனப்படும். இந்த கொடி வகை தாவரங்களில் பல மூலிகை வகைகளை சேர்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் நமது நாட்டில் சில இடங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு வகை கொடி தாவரம் தான் கழற்சிக்காய். இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர். இந்த கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த கழற்சிக்காய் பயன்பாடுகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

கழற்சிக்காய் பயன்கள்
நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆண்கள் உடல்நலம் ஒரு சில ஆண்களுக்கு சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோஅவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.



தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகி போகச்செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் கட்டுப்படும்.

யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கிறது. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 10 க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை இந்த கழற்சிக்காய் என்ற தெலுக்காய்க்கு உண்டு.

No comments:

Post a Comment