100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள்!
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும், வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்தப் பனை மரம், பண்டைய காலங்களில் ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்தே பெறப்பட்டன.
பனை குடும்பத்தில்
மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.
குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகை மரமான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் ஓலை சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்த்தினார்களாம்.
இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும்.
ஒரு முறை பூத்த பின், அந்த மரம்
காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கின்றது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவார்களாம் இதற்க்கு காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது. இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்குமாம் .
காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை மரம் இல்லை என்பதால் இவ்வகை மரங்களை பாதுகாக்கபடவேண்டிய இயற்கையின் படைப்பில் மிகவும் அரிதான மரம் தாழிப்பனை.
No comments:
Post a Comment