medicinal-uses-of-neem-leaf-flower-and-cayenne-in-summer(கோடை காலத்தில் வேம்பு இலை, பூ, காயின் மருத்துவப் பயன்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 25 September 2021

medicinal-uses-of-neem-leaf-flower-and-cayenne-in-summer(கோடை காலத்தில் வேம்பு இலை, பூ, காயின் மருத்துவப் பயன்கள்)

femina

கோடை காலத்தில் வேம்பு இலை, பூ, காயின் மருத்துவப் பயன்கள்


ஆயூர்வேத மருந்துகளில் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பிலையில் நிம்பின், நிம்போலைடு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி போன்ற பண்புகளை கொண்டிருக்கிறது.இவை அனைத்து சருமத்திற்கு நன்மை தருகின்றன. வேப்பிலை சருமத்திற்கு என்ன பயனளிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

சருமத்தை ஈரப்பதமாக்கும்:
வேப்ப இலைகள் சருமத்தை ஈரபதமாக்கி மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. முகப்பரு காரணமாக ஏற்படும் வடுக்கள் மற்றும் தோல் நிற மாற்றத்தை குறைக்கிறது.வேப்பிலை முகப்பருவை குணப்படுத்தும் பண்பு உள்ளது. வேப்பிலையின் சாற்றை முகப்பருவின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறையும்.வறண்ட சருமம் உடையவர்கள் வேப்பிலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு அரைத்து சருமத்திற்கு பூசி குளிக்கலாம்.

பொடுகு மற்றும் முடி உதிர்வு:
ஒரு கப் வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலைக்கு தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் முடி பிரச்சனை விரைவில் குணமாகும்.இதனை அடிக்கடி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை மறைந்து விடும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:
வேம்பு இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் தினமும் இரண்டு அல்லது மூன்று வேப்ப இலைகளை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. தினமும் காலையில் வேப்பங்கொழுந்து அல்லது பூவை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

கால் ஆணிகளை குணப்படுத்தும்:
வேம்பு ஆணி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை பூசி வந்தால் விரைவில் ஆணி நோய் குணமாகும்.சரும அரிப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு இவை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தசை மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும்:
வேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது தசை மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது.ஒரு கப் தண்ணீரில் இலைகளை வேக வைத்து அதை வடிகட்டி குளிர்விக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம்.மூட்டு வலிக்கு முடக்கத்தான் இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முழங்காலில் பற்றுப் போட்டு வந்தால் வலி குணமடையும்.

கண்களுக்கு புத்துணர்ச்சி:
வேப்பிலை இலைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அதை கண் இமைகளில் மற்றும் கண்களை கழுவ வேண்டும்.இவை கண்களை குளிர வைக்கும்.வெயில் காலத்தில் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு நல்லது. உடல் உஷ்ணத்தை குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் சரியாகும்.பார்வை நன்றாக தெரியும்.

No comments:

Post a Comment