செவ்வந்திப் பூ மருத்துவப் பயன்கள்
ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் புயன்களை அறிந்துகொள்வோம்.
செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி
செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும். மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி. மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச்சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் காரணம்தான்.
No comments:
Post a Comment