with-a-traditional-oil-bath-lets-celebrate-diwali(பாரம்பரியமிக்க எண்ணெய் குளியலுடன் தீபாவளியை கொண்டாடுவோம்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 22 September 2021

with-a-traditional-oil-bath-lets-celebrate-diwali(பாரம்பரியமிக்க எண்ணெய் குளியலுடன் தீபாவளியை கொண்டாடுவோம்!)

femina

பாரம்பரியமிக்க எண்ணெய் குளியலுடன் தீபாவளியை கொண்டாடுவோம்!


பாரம்பரியமிக்க எண்ணெய் குளியலுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும். அவ்வாறு நாம் செய்யும்போது நமது உடல் புத்துணர்வு பெறுவதோடு, பண்டிகையையும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று கவின்கேர் நிறுவனத்தின் மீரா அன்ட் ஹேர் கேர் புராடக்ட்ஸ் மூத்த புகழ்பெற்ற விஞ்ஞானி லட்சுமி தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது:&

“தீபாவளிக்கு அதனுடன் தொடர்புடைய பல்வேறு மரபுகள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளை சுத்தம் செய்தல், தீபம் ஏற்றி வீடுகளை அலங்கரித்தல், புத்தாடைகளை அணிதல், பட்டாசுகளை வெடித்தல், இனிப்பு உள்ளிட்ட சுவையான உணவுகளை சாப்பிடுதல், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளுதல் என்று பல்வேறு சந்தோஷங்களை நம் ஒவ்வொருவர் வீட்டிற்கு தீபாவளி பண்டிகை கொண்டு வருகிறது. தீபாவளியும் எண்ணெய் குளியலும் பிரிக்க முடியாத ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம், அன்றை தினம் அதிகாலை ஆன்மீக எண்ணெய்க் குளியலுடன் துவங்குகிறது.

தீபாவளி அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு உச்சி முதல் பாதம் வரை நன்றாக நல்லெண்ணெய்யை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்து, வெது வெதுப்பான தண்ணீரில் மூலிகை பொடிகள் கலந்த ஹேர் வாஷ் மூலம் முடியை அலசி குளித்தல் வேண்டும். இது ஆயில் பாத் என்றும், எண்ணெய்க் குளியல் அல்லது கங்கா ஸ்நானம் அல்லது சுய அபயங்கம் அல்லது உப்தான் என்றும் அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் இளைஞர்களின் தலையில் எண்ணெய் தேய்த்து ஆசீர்வதிக்கிறார்கள். தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு நவீனமயமாக்கல், நீண்ட காலமாக நாம் செய்து வரும் எண்ணெய்க் குளியலின் மரபு மற்றும் பாரம்பரியத்தின் உரிமையை பறிக்கவில்லை. எண்ணெய் நமது உடலில் உட்புகுந்து, தோலை முழுமையாக புத்துயிர் பெறச் செய்கிறது. எண்ணெய் குளியல் நமக்கு பல்வேறு பலன்களை தருகிறது. பளபளப்பான தோல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துல், உடல் சூட்டை தணித்தல், நிம்மதியான தூக்கம், மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, எப்போதும் இளமை தோற்றம் மற்றும் முக்கியமாக ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் பளபளப்பான முடி ஆகிய பலன்களை தருகிறது.

பாரம்பரிய எண்ணெய் குளியல் என்பது, உச்சி முதல் பாதம் வரை நன்றாக எண்ணெய்யை தடவி நன்கு மசாஜ் செய்வதில் தொடங்கி, வெது வெதுப்பான தண்ணீரில் குளித்து, ஹேர் வாஷ் மூலிகை பவுடர் மூலம் தலையை நன்கு தேய்த்து குளிப்பதில் முடிவடைகிறது. ஹேர் வாஷ் பவுடர், தலை முடிக்கு சுத்தம், பளபளப்பு மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு பலன்களை தருகிறது. மேலும் இந்த எண்ணெய் குளியல், நமது தோலில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கிறது. சீயக்காய், செம்பருத்தி, துளசி, ரோஜா இதழ் மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் கலவையே மூலிகை ஹேர் வாஷ் பவுடர் ஆகும்.

மூலிகை ஹேர் வாஷ் பவுடருடன், வழக்கமாக எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் உடல் சூடு தணியும், ஆரோக்கியமான, நீண்ட, அடர்த்தியான கூந்தலை பெற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளான மாசுபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிற்கு எண்ணெய் குளியல் ஒரு சிறந்த தீர்வாகும். எனவே, ஒருவர் வழக்கமாக எண்ணெய் தேய்த்து குளித்தால், அது ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலனுக்கு உதவுகிறது. எனவே எண்ணெய் தேய்த்து குளிப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்“ என்று லட்சுமி தியாகராஜன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment