ரோஜா ஆப்பிள் பழத்தின் மருத்துவப் பயன்கள்
வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் ரோஜா ஆப்பிள் பழம் பற்றி, நமக்கு தான் இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டது. இந்த பழமானது, கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு தண்ணீர் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கின்றனர்.
இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் இடத்தை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால், இதிலுள்ள சத்துக்கள் அப்படி, வாருங்கள், இப்போது ரோஜா ஆப்பிளின் மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறேன். இதை படித்துவிட்டாவது, இதை எங்காவது பார்த்தால் வாங்கி சாப்பிட மறவாதீர்கள். நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு பழத்திலும், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய எண்ணற்ற வைட்டமின்கள்,
ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. அவற்றுள் சில,
* வைட்டமின் சி மற்றும் ஏ
* நியாசின்
* கால்சியம்
* பொட்டாசியம்
* மெக்னீசியம்
* பாஸ்பரஸ்
* புரதம்
* நார்ச்சத்து
முன்பு கூறியது போலவே, இந்த பழம் எண்ணற்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது.
* மலேசியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு ரோஜா ஆப்பிள் மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காபி பயன்படுத்தப்படுகிறது.
* இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற உதவுகிறது.
* ரோஜா ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.
* அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடிய டையூரிடிக் மற்றும் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
* ரோஸ் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவுகிறது.
* கியூபாவின் பூர்வீகத்தில், ரோஸ் ஆப்பிள் வேரை கால்-கை வலிப்பு பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
* கொலாம்பிய மக்கள் ரோஜா ஆப்பிள் விதைகளை வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment