natural-remedies-for-minor-pains-in-women- பெண்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன வலிகளும் இயற்கையான தீர்வுகளும்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 15 September 2021

natural-remedies-for-minor-pains-in-women- பெண்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன வலிகளும் இயற்கையான தீர்வுகளும்!

femina

பெண்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன வலிகளும் இயற்கையான தீர்வுகளும்!

பெண்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன வலிகளுக்கு வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும் நேரம், அங்கு காத்திருக்கும் நேரம், சற்று பொறுமையாக வீட்டு வைத்தியத்தை பின்பற்றிப் பார்க்கலாம். வலிகளில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இயற்கை மருந்துகளில் அப்படி என்ன பிரமாதம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசையா? மிகவும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்கள் தான் அவை. ஆனால், அது ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப விரைவாகவோ அல்லது தாமதமாகவோ வேலை செய்யும். சரி, அவற்றைப்பற்றி ஒவ்வ ொன்றாக, என்னென்ன வலிகளுக்கு என்ன வீட்டு மருந்து என்று பார்க்கலாம்.

1. பல் வலி
பல் வலியை யாராலும் தாங்க முடியாது. பற்களில் பொதுவாக வலி சொத்தை பற்களினால், பல் உடைந்தோ அல்லது வீறிட்டு இருந்தாலோ ஏற்படும் அல்லது பற்பசை தொற்று நோய் வலியாகவோ, கடவாய் பற்கள் வளரும் போது ஏற்படும் வலியாகவோ இருக்கலாம் . பற்களில் வலி இருந்தால் அதிக சூடாகவும், குளிராகவும் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. அது வலியை மேலும் அதிகரிக்கும். தலையை உயர்த்தி படுத்துக் கொள்ளுங்கள். பற்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். பெப்பர்மின்ட் எண்ணெய் பயன்படுத்தலாம்.சிறிது காரமாக இருக்கும் என்பதால், வலிக்கு நன்றாக இதமாக இருக்கும். மிதமான சூடு உள்ள தண்ணீரில், கல் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால், வலி நீங்கும். வீக்கம், தொற்று இருந்தாலும் நீங்கி விடும். இந்த எளிய முறைகளை பின்பற்றி பல் வலியில் இருந்து விடுபடுங்கள். நீண்ட நாட்கள் தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

2. தலைவலி
இது நம்மில் பெரும்பாலோருக்கு வரக்கூடிய பொதுவான வலிதான் என்றாலும் இதை பெரிதாகாமல் கவனித்து கொள்வது நல்லது. நன்றாக தண்ணீர் குடித்து, போதிய ஓய்வு எடுத்தால் தலைவலி போய்விடும். அப்படியும் போகவில்லை என்றால், நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு மிக அதிக ஓய்வு தேவை. மைகிரேன் போன்ற வலிகளுக்கு லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தலாம். உடலில் ஏற்படும் வலியையும் போக்கும் குணம் கொண்டது. நல்ல வலி நிவாரணியாகவும், ஆன்டி-இன்பிளமேடரி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டதாவும் இருக்கிறது. லாவெண்டர் எண்ணெய்யை முகர்ந்தால் போதும் பதட்டத்தில் இருந்து விடுபடலாம். வீட்டில் ஒரு விளக்கின்மீது இந்த எண்ணெயை வைத்தால் இந்த எண்ணெயின் மனம் வீடு முழுவதும் பரவும். அல்லது இதற்கு பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஒரு சிறந்த தீர்வு ஆகும்.

3. கழுத்துவலி மற்றும் பின்முதுகுவலி
உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால், கழுத்து வலி, முதுகுவலி ஏற்படும். நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நிலையை சரி செய்தாலே பாதி வலிகள் தீர்ந்துவிடும்.தினமும், 30 முதல் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி, அல்லது வாக்கிங் செல்ல வேண்டும்.மசாஜ் செய்து கொள்தல், அக்குபங்க்சர் கூட உடல் வலிகளுக்கு நல்ல வலி நிவாரணம் தரும்.  

No comments:

Post a Comment