நாய் கடுகின் மருத்துவப் பயன்கள்
நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை நீங்கள் தெருவோரங்களில், காட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம் காணலாம், மழை காலங்களில் இது அதிகமாக காணப்படும். ஆனால் அதுதான் நாய் கடுகு என்று பலருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு களைச்செடி என்று கடந்து சென்று விடுவார்கள். இந்த நாய் கடுகு (mustard seeds) செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர், கிளிமே விச்கோச (Cleome viscosa). இந்த நாய் கடுகை, நாய்வேளை, மற்றும் காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள்.
இந்த செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்.
இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தான், சைனா, அமெரிக்க போன்ற நாடுகளிலும் இந்த நாய் கடுகு செடி அதிகம் காணப்படுகின்றது.இதன் இலைகள் சிறிதாகவும், மூன்று பிரிவுகளோடும் இருக்கும்.இதன் காய்கள் குச்சி போன்று நீளமாக இருக்கும். இதனுள் இருக்கும் விதைகள் கடுகு போன்று சிறிதாக இருக்கும், அது நாய் கடுகு என்று அழைக்கபடுகின்றது
இந்த நாய் கடுகு செடியின் விதை, காய், பூக்கள், இலைகள், தண்டு, வேர் என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.இந்த நாய் கடுகு சித்த வைத்தியம், யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.இது பல நோய்களை குணப்படுத்த பயன்படுகின்றது.இந்த செடியில் ப்லேவனைடு, ப்லேனைடுஸ், டேர்பின், ஹைட்ரோகார்பன், பளிப்ளினைடுஸ் போன்ற பல நன்மை தரும் வேதி பொருட்கள் உள்ளன.நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு, ஹெல்மாடிக் எதிர்ப்பு செயல்பாடு டயரியல் எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, எமெடிக் எதிர்ப்பு, ஹெபடோ பாதுகாப்பு போன்ற பண்புகளும் இதற்கு உள்ளது. கல்லீரல் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது ஏற்ற மருந்தாக (பலன்) உள்ளது, குறிப்பாக் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு குறைகள் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
No comments:
Post a Comment