nochi-leaf-full-of-amazing-medicinal-benefits அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 13 September 2021

nochi-leaf-full-of-amazing-medicinal-benefits அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!

Nochi Leaf

அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை !!

நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாக காயவைத்து அந்த நீரில் குளித்து வர காய்ச்சலின் போது ஏற்பட்ட உடல் வலி நீங்கும்.


சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமேயானால் இந்த நொச்சி இலைகளை தூளாக நசுக்கி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடித்து வந்தால் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைபாரம், தலைவலி, தலையில் நீர் கோர்த்து இருப்பது இவைகள் அனைத்தும் வியர்வையாக வெளியேறிவிடும்.
 
மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.
 
வீக்கம், உடல்வலி, உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
வீட்டைச் சுற்றி இடம் உள்ளவர்கள் நொச்சி செடியை வளர்த்து வந்தால் பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருக்கும். நம் வீட்டு வாசலில் நொச்சிச் செடிகள் இருந்தால் நம் வீட்டிற்குள் வரும் தூசியினை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
 
நொச்சி இலைகளை தீ மூட்டி அதில் வரும் புகையினால் கொசுக்கள் விரட்டபடுகிறது. எந்தப் பக்கவிளைவும் இல்லாத கொசு விரட்டியாக இது நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment