complete-fruit முழுமையான பழம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 13 September 2021

complete-fruit முழுமையான பழம்

Femina

முழுமையான பழம்

காலையில் சோம்பலாக இருப்பது முதல், தூக்கமில்லா இரவுகள் வரை அனைத்துக்கும் மருந்தாக ஆப்பிளை டாக்டர்கள் பரிந்துரைப்பதற்கு காரணம் இருக்கிறது. இதைப் பற்றி கூடுதல் விவரங்களைக் தருகிறார் பிரேர்னா சிங்

புராணங்களில் ஆப்பிள்
ஆதாமும் ஏவாளும் ஆப்பிளை முதன்முதலில் சாப்பிட்ட பின்னர், நல்ல உடல்நலத்துக்காக யூதர்கள் ஷேகர் என்ற பானத்தையும், கிரேக்கர்கள் சிகரா என்ற பானத்தையும் ஆப்பிளில் இருந்து தயாரித்து குடித்து வந்தனர். செல்டிக் வீரர்களின் ஓய்வெடுக்கும் கற்பனையான அவலான் என்ற தீவின் பெயருக் கான அர்த்தம் ஆப்பிள் தீவு என்பதே. வசந்தகாலம், இளமைக் கான ஸ்காண்டிநேவிய பெண் கடவுளான இடுனா, வட ஐரோப் பிய கடவுள்களுக்கு தனது தோட்டத்திலிருந்து தினசரி ஒரு ஆப்பிளைத் தருவதன் மூலம் அவர்களை இளமையாக வைத்து இருக்கிறாள் என்பது நம்பிக்கை. இதற்கெல்லாம் மேலாக தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைப் பார்க்க வேண்டியதில்லை என்ற பழமொழியும் இருக்கிறது.

டாக்டர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்
“ஆப்பிள்களில் ஏராளமான ஃபிளேவனாய்டு, பாலிஃபீனால்கள் இருக்கின்றன, அவை சிறந்த ஆண்டிஆக்ஸிடண்ட்கள்,” என்கிறார் புதுதில்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஊட்டச்சத்து நிபுணர் ரிதிகா சமதார். 100 கிராம் ஆப்பிளை உண்பதன் மூலம், 1500 கி. வைட்டமின் சி---க்கு இணையான ஆண்டிஆக்ஸிடண்ட்கள் கிடைக் கின்றன. “ஆப்பிளில் உள்ள தாதுப்பொருள்களும், வைட்டமின் களும் ரத்த சிவப்பணுக்களை வலுப்படுத்துகின்றன, ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகளை இதிலுள்ள பெக்டின் குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள மாலிக், டார்டாரிக் அமிலங்கள் செரிமானத்துக்கு உதவுகின்றன. ஆப்பிளில் உள்ள சர்க்கரையை வயிறு எளிதாகச் செரிக்கிறது. தூங் குவதற்கு முன்பு ஒரு ஆப்பிள் சாப் பிட்டால் தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் அணுகாது.
ஆப்பிளில் வைட்டமின் பி, சி, பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன-. ஒரு நேரத்தில் அதிக பட்சம் மூன்று ஆப்பிள்கள் வரை சாப்பிடலாம். இன்னொரு நல்ல விஷயம்: ஆப்பிளில், கொழுப்பு, சோடியம், கொலஸ்ட்ரால் ஆகியவை இல்லை! இந்த பழம் உங்கள் பற்களுக்கும் நல்லது. டார்டாரிக் அமிலம் பற்சொத்தை ஆவதை தடுக்கும். பழத்தை கடித்து தின்பதால் ஈறுகள் வலுவடையும், பல்லின் அழுக்குப் படிவுகள் அகற்றப்படும். இதனால்தான் ஆப்பிள்கள் இயற்கை டூத்பிரஷ் என்று அழைக்கப்படுகின்றன.

ஆப்பிளை அறிந்து கொள்ளுங்கள்
ஆப்பிள் வளர்த்தல் தொடர்பான அறிவியலின் பெயர் போமாலஜி.
புதிய ஆப்பிள்கள் நீரில் மிதக்கும். அவற்றில் 25 சதவீதம் காற்று இருப்பதே காரணம்.
கேஸ்பியன், கருங்கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆப்பிள் மரம் முதலில் தோன்றியது. உலகெங்கும் 7,500 ஆப்பிள் வகைகள் வளர்க்கப்படுகின்றன.
ஆப்பிள் வாங்கும்போது, பளிச் சென்ற நிறமுடைய, மென்மையான தோலுடையதை வாங்குங்கள். ஃபிரிட்ஜில் வையுங்கள்.
வெட்டப்பட்ட ஆப்பிள்கள் பிரவுன் நிறத்துக்கு மாறாமல் தடுக்க, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸை தெளிக்கவும்.

No comments:

Post a Comment