நொறுக்குத் தீணிக்கு நோ
நீங்கள், வேஃபர்களுக்கு பதில் பாதாமுக்கும் ஐஸ் க்ரீமிற்கு பதில் பழச்சாறும் அருந்த துவங்கியிருக்கலாம். உங்கள் உணவுப் பழக்கம் ஆரோக்கிய பாதையில் செல்வதாக நீங்கள் நினைக்கலாம். ஃவேபர்கள் தொடர்பான எதிர்மறை கருத்துக்களை மீறி இவற்ற
ை தவிர்த்து உலர் உணவுகளை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கிய இலக்கை அடைய உதவுமா? ஸ்னேக்ஸ் சாப்பிடுவது நல்ல பழக்கம் அல்ல என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
எச்சரிக்கை: ஆனால், அந்தப் பழச்சாறு பாட்டிலில் சுக்ரோஸ் கலந்திருக்கிறது.இது சர்க்கரை வகையைச் சேர்ந்தது. சுக்ரோஸ் அதிகம் உள்ள உணவுகள் ரத்த அழுத்த அளவை அதிகமாக்கி பின்னர் அதை குறையவும் செய்கிறது. இப்படி திடீர் எற்ற இறக்கம், சர்க்கரை ஆர்வத்தை உண்டாக்கி மனநிலை மாற்றம், களைப்பு, எடை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு வித்திடும். கைப்பிடி அளவுக்கு மேல் தினமும்
பாதாம் சாப்பிடுவதும் நல்ல பழக்கம் அல்ல. கொழுப்பு, கலோரி அதிகம் உள்ள பாதாம் நீண்ட கால அளவில் எடையைக் கூட்டும்.அதில் உள்ள மாங்கனீசும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்னேக்ஸ் பழக்கத்தை குறைக்க சிறந்த வழி, குறைந்த கொழுப்பு யோகர்ட், கேரட் போன்ற ஆரோக்கிய உணவுகளை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment