ரசம்: எளிமையான மருந்து
எளிமையாகவும் விரைவாகவும் செய்துவிடக் கூடிய ரசத்துக்கு உள்ள அரிய குணங்கள் ஆச்ச ரியம் தருபவை. நமது உடலில் செரிமான நொதிகள் சுரக்க ரசம் பெரிதும் உதவுகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்துக்கு உதவுகின்றன. ‘‘பண்டை
கால விருந்துகளில் பாயாசத்துக்குப் பின்னரே, ரசம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கும் திருமணங்களில் ரசம் கடைசியாகத் தரப்படுவதை பார்த்திருக்கலாம். வயிற்றில் அடுக்கடுக்காக சென்று சேரும் அனைத்து உணவுகளையும் செரிக்க வைக்கும் சக்தி ரசத் துக்கு இருப்பதால்தான் அதை கடைசியில் அருந்தினார்கள்’’ என்கிறார் ‘ஆஹா என்ன ருசி’ புகழ் பிரபல செஃப் ஜேகப்.
அது மட்டுமில்லாமல் ரசம் வயிற்றை சீர் செய்து, உடல்வலியைக் குறைக்கக் கூடியது. இருமல், சளி, மூச்சு முட்டுதலுக்கும் தீர்வு தரும். காய்ச்சல் நேரங்களில் ரசம் குடிப்பது பாட்டி வைத்திய முறைகளில் ஒன்று.
மேலும்
சாப்பிடும்போது இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைப்படி சாப்பிடுவது தான் நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக் கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.
No comments:
Post a Comment