amazing-medical-tips-to-relieve-diseases(நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத வைத்திய குறிப்புக்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

amazing-medical-tips-to-relieve-diseases(நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத வைத்திய குறிப்புக்கள் !!)

Health

நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத வைத்திய குறிப்புக்கள் !!



வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். 

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
 
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
 
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
 
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
 
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
 
உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட முடியும். இதனால் புற்று நோயாளிகளை கூட ரிக்கவர் ஆக்கலாம் என ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தின் ஆய்வில் அறியப்பட்டுள்ளது. தினமும் தியானம் செய்வது மார்பக புற்றுநோய் வளராமல் தடுக்கிறது. இது இயற்கையாக புற்றுநோய் கட்டியை உருவாக்கும் செல்களை அழிக்க பயனளிக்கிறது.


No comments:

Post a Comment