some-tips-to-get-rid-of-sinus-problem-naturally(இயற்கையான முறையில் சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான சில குறிப்புகள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

some-tips-to-get-rid-of-sinus-problem-naturally(இயற்கையான முறையில் சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான சில குறிப்புகள் !!)

Sinus problem

இயற்கையான முறையில் சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான சில குறிப்புகள் !!



ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும். தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
 
ஆவி பிடிப்பது மிகவும் தற்காலிகமான நிவாரணம் என்றே பலரும் கூறுவர். ஆனால் அது உண்மை அல்ல. ஆவி பிடிப்பது தினமும் நாம் செய்து வந்தால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். ஆவி பிடிப்பதினால் தலையில் மூக்கில் இருக்கும் சளி கொஞ்சம் கொஞ்சமாக உருகி வெளியே வந்துவிடும்.
 
மிளகில் பலவிதமான நல்ல குணநலன்கள் உள்ளது குறிப்பாக ஜலதோஷம் காய்ச்சல் இருந்தால் நாம் இயற்கை முறையில் செய்யக்கூடிய கசாயத்தில் கூட அதிகமாக மிளகு சேர்த்துக் கொள்வோம். இந்த மிளகு கலந்த டீயை நாம் தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் ஆஸ்துமா அலர்ஜி சைனஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
 
குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

No comments:

Post a Comment