some-foods-and-its-benefits-to-get-clean-blood(சுத்தமான இரத்தத்தை பெற சில உணவுகளும் அதன் பயன்களும் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

some-foods-and-its-benefits-to-get-clean-blood(சுத்தமான இரத்தத்தை பெற சில உணவுகளும் அதன் பயன்களும் !!)

Blood purification

சுத்தமான இரத்தத்தை பெற சில உணவுகளும் அதன் பயன்களும் !!



நம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தூய்மையான இரத்தம் அவசியம். எனவே சுத்தமான இரத்தத்தை பெற சில உணவுப் பொருட்கள் உதவுகின்றன. இந்த உணவுப் பொருட்களை நாம் சாப்பிட்டு வரும் போது இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு இரத்தம் தூய்மையாகிறது.

ஆப்பிள், கொய்யா, மாதுளை, கிவி, வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், பப்பாளி என அனைத்துப் பழங்களும் ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்தத்தில் உள்ள கெமிக்கல்கள், கழிவுகளை வெளியேற்ற உதவுவதில் சிறந்தது.
 
செம்பருத்திப்பூ கிடைத்தால் தினம் ஒன்று சாப்பிடலாம். செம்பருத்தி டீயாக குடிக்கலாம். செம்பருத்திகளை உலரவைத்து பொடியாக்கி, அதில் டீ தயாரித்தும் குடிக்கலாம். சிறுநீரகத்தின் வடிகட்டியாக செயல்படும் இந்தப் பூ. செம்பருத்தி ரத்தத்தை சுத்தம் செய்யும். 
 
செரிமானத்துக்கு உதவி செய்து, மலச்சிக்கலைப் போக்கி கழிவுகளை வெளியேற்றும். இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தின் சுழற்சி சீராக இருக்கும். ரத்தத்தை எங்கேயும் தங்காமல் பாதுகாக்கும்.
 
காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். வெறும் வயிற்றில், காப்பர் பாத்திர நீரை லேசாக சூடாக்கி குடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. கல்லீரலை நச்சுகளின்றி பாதுகாக்கும்.
 
அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது. பால், ஆர்கானிக் பாலாக இருப்பது நலம். மஞ்சள் தூள் கலந்த உணவுகள் எல்லாமே உடலுக்கு நல்லதையே செய்யும்.
 
கோதுமை புல் ஜூஸ் குடித்து வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அந்த அளவுக்கு பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் கொண்டது. கல்லீரலை சுத்தம் செய்யும். ரத்தசோகையை முற்றிலுமாக விரட்டும்.

No comments:

Post a Comment