benefits-of-adding-brinjal-to-your-diet(கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 16 October 2021

benefits-of-adding-brinjal-to-your-diet(கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!)

Brinjal

கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!


கத்திரிக்காயில் கொலஸ்ட்ரால் இல்லை, கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகள் மிகக் குறைவு.நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காயை உட்கொள்வது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுவதைத் தடுக்கிறது.

கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது.
 
கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளன, இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. 
 
எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க கத்தரிக்காயின் நன்மைகளை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  கத்தரிக்காய்களில் பினோலிக் சேர்மங்கள் உள்ளன. கத்தரிக்காய்களில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  
 
எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதற்கு  தேவையான கால்சியம் உள்ளன. கத்தரிக்காயில் கொழுப்பு  மிகக் குறைவாக உள்ளது. ஆனால்  நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது, இது நம் உடலுக்கு உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.
 
வறுத்த கத்தரிக்காய் சுவை நன்றாக இருக்கும் ஆனால் அவை நிறைய எண்ணெய்யை உறிஞ்சிவிடும். எனவே வேகவைத்த கத்தரிக்காயை உட்கொள்வது பயன் தரும்.
 
கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்
 
கத்தரிக்காயை குறைவான அளவில் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment